இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 15 ஆண்டுகளில் பல வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திகொண்டு, தற்போது நட்சத்திர வீரர்களாக வளர்ந்துள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களிடம் போதிய திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாமல் உள்ளனர்.
அந்த வரிசையில், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஓஜாவும் அடங்குவார். இந்திய அணியில் 2008 முதல் 2013 வரை இடம்பிடித்திருந்தாலும், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அஸ்வினுக்கு அடுத்தப்படியாக ஓஜாதான் முக்கிய சுழற்பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அதேசயம், ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் (ஹைதராபாத்) அணி சாம்பியன் பட்டம் வெல்ல இவர் முக்கியக் காரணமாக இருந்தார். அந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்பிள் கேப்பை பெற்றார்.
2013இல் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதுதான் ஓஜா இந்திய அணிக்காகக் களமிறங்கிய கடைசி போட்டியும் கூட. அப்போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் தலா ஐந்து விக்கெட்டுகள் என 10 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதுதான, சச்சினின் கடைசி போட்டி என்பதால், அவரால் நிச்சயம் அதை மறந்திருக்க முடியாது.
அதன்பின் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவின் வருகையால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இதனாால், உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். இதனிடையே, 2014இல் அவரது பந்துவீச்சுக்கு ஐசிசி இடைக்கால தடை விதித்திருந்தாலும், அந்தத் தடை 2015இல் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவந்த அவர், அதன்பின் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில், 33 வயதான இவர் தான் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக இன்று ட்விட்டரில் அறிவித்துள்ளார். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், ரசிகர்கள் தனக்கு காட்டிய அன்பும் ஆதரவும் எப்போதும் தன்னை ஊக்குவிக்கும் எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
-
It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time 🙏🏼 pic.twitter.com/WoK0WfnCR7
— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time 🙏🏼 pic.twitter.com/WoK0WfnCR7
— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020It’s time I move on to the next phase of my life. The love and support of each and every individual will always remain with me and motivate me all the time 🙏🏼 pic.twitter.com/WoK0WfnCR7
— Pragyan Ojha (@pragyanojha) February 21, 2020
இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் ஓஜா விளையாடியுள்ளார். அதில், டெஸ்ட் போட்டிகளில் ஏழு முறை ஐந்து விக்கெட்டுகள் ஒரு முறை 10 விக்கெட்டுகள் உட்பட 144 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒருமுறை கூட ஆசிய மண்ணைத் தவிர்த்து அந்நிய மண்ணில் விளையாடியதில்லை என்பது கவனத்துக்குரியது. 2008 முதல் 2015 வரை ஐபிஎல் தொடரில் 92 ஆட்டங்களில் விளையாடி 82 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers