ETV Bharat / sports

பாக். வீரர் ஹஃபீஸிற்கு மீண்டும் கரோனா பாசிட்டிவ் - பாகிஸ்தான் - இங்கிலாந்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஹஃபீஸிற்கு இரண்டாவதாக செய்யப்பட்ட கரோனா பரிசோதனை முடிவிலும் பாசிட்டிவ் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

positive-negative-positive-hafeez-found-covid-19-plus-ve-in-pcb-test

author img

By

Published : Jun 27, 2020, 1:34 PM IST

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையடுத்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய தொடர்கள் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடக்கவுள்ள இந்தத் தொடருக்காக பாகிஸ்தான் அணி சார்பாக 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஞாயிறுக்கிழமை (நாளை) இங்கிலாந்து புறப்படவுள்ளது. இதனையொட்டி தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ந்த பாகிஸ்தான் நிர்வாகம், அவர்களுக்கான மாற்று வீரர்களைத் தேர்வு செய்தது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் ஹஃபீஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள தவிர்த்தார். பின்னர், தனியார் லேப்பில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஹஃபீஸிற்கு கரோனா நெகட்டிவ் என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியினருக்கு கிரிக்கெட் வாரியம் சார்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் பாக். வீரர் ஹஃபீஸிற்கு மீண்டும் கரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதனால் ஹஃபீஸ் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படாத பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நாளை இங்கிலாந்திற்கு புறப்படவுள்ளனர். இங்கிலாந்து சென்ற பின், 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், ஜூலை 13ஆம் தேதியன்று தங்களது பயிற்சியை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கங்குலி - டிராவிட் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல, இப்போதும் முக்கியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.