இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்த போட்டியில் வங்கதேச அணியின் வீரர்கள், லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசிய பவுன்சரினால் தலையில் அடிப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
கொல்கத்தாவிலுள்ள சிட்டி மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்ட லிட்டன் தாஸுக்கு சிடி ஸ்கேனும், நயீம் ஹசனுக்கு எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரை காண வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீன நேற்று கொல்கத்தா வந்திருந்தார்.
அச்சமயம் வங்கதேச அணி வீரர்கள் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டிருந்ததால், வீரர்களை தொடர்பு கொண்ட அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வீரர்களின் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடையே கேட்டறிந்தார். அதன் பின் காயமடைந்த வீரர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு அவர்களின் நலனைப்பற்றி கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தனது முதல் சதத்தை பதிவு செய்த லபுசாக்னே..! ஆஸ்திரேலியா அபாரம்!