இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என முன்னிலை வகிக்க, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.
பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய வேகப்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 29 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஐந்து, உமேஷ் மூன்று, ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் கோலி - புஜாரா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது டெஸ்ட்டில் தனது 24ஆவது அரைசதத்தை நிறைவு செய்த புஜாரா, 55 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் கோலி தன் பங்கிற்கு ஒரு அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினார்.
-
A memorable day for #TeamIndia at the #PinkBallTest.
— BCCI (@BCCI) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
After bundling out Bangladesh for 106 runs, the batsmen put up a total of 174/3 at Stumps on Day 1.@Paytm #INDvBAN pic.twitter.com/G6o23IUET3
">A memorable day for #TeamIndia at the #PinkBallTest.
— BCCI (@BCCI) November 22, 2019
After bundling out Bangladesh for 106 runs, the batsmen put up a total of 174/3 at Stumps on Day 1.@Paytm #INDvBAN pic.twitter.com/G6o23IUET3A memorable day for #TeamIndia at the #PinkBallTest.
— BCCI (@BCCI) November 22, 2019
After bundling out Bangladesh for 106 runs, the batsmen put up a total of 174/3 at Stumps on Day 1.@Paytm #INDvBAN pic.twitter.com/G6o23IUET3
இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து 68 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச பந்துவீச்சில் எபாதத் ஹூசைன் இரண்டு, அல்-அமின் ஹூசைன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.