ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் லிவிங்ஸ்டன் 29 ரன்களிலும், ஜோஷ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து பேன்கிராஃப்ட், ஆஷ்டன் டர்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கியது. இந்தப் போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பேன்கிராஃப்ட் 37 பந்துகளில் 51 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 21 பந்துகளில் ஆறு சிக்சர்கள் உள்பட 56 ரன்களை சேர்த்து அசத்தினார். இதன் மூலம் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது. ரெனிகேட்ஸ் அணி சார்பில் ரிச்சர்ட்சன் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் பின்ச் 28 ரன்களிலும், ஹார்பெர் 15 ரன்களிலும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷான் மார்ஷ் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து 55 ரன்களில் வெளியேறினார்.
-
GREAT night to be a Scorcher.
— KFC Big Bash League (@BBL) December 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
If you haven't seen Chris Jordan's catch, watch it. Watch it now! #BBL09 pic.twitter.com/SnMp0L5WvJ
">GREAT night to be a Scorcher.
— KFC Big Bash League (@BBL) December 21, 2019
If you haven't seen Chris Jordan's catch, watch it. Watch it now! #BBL09 pic.twitter.com/SnMp0L5WvJGREAT night to be a Scorcher.
— KFC Big Bash League (@BBL) December 21, 2019
If you haven't seen Chris Jordan's catch, watch it. Watch it now! #BBL09 pic.twitter.com/SnMp0L5WvJ
பின்னர் களமிறங்கிய வெப்ஸ்டர், 37 பந்துகளில் 67 ரன்களை எடுத்து இறுதிவரை போரடியும் , ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி, இத்தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஐபிஎல் சூதாட்ட லஞ்ச புகார்: சம்பத்குமார் ஐபிஎஸ் உள்பட நால்வர் விடுதலை!