ETV Bharat / sports

முஷ்டாக் அலி டி20 தொடர்: கேரளாவை அடித்து நொறுக்கிய தமிழ்நாடு அணி! - பெரியசுவாமி, நடராஜன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்

திருவனந்தபுரம்: சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தியது.

Syed Mushtaq Ali Trophy
author img

By

Published : Nov 8, 2019, 10:24 PM IST

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான 'சையது முஷ்டாக் அலி' தொடர் இன்று முதல் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இந்தத் தொடரில் ஒரு குழுவிற்கு எட்டு அணிகளாக, நான்கு குழுக்களில் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் சுற்று ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கேரளா அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேரளா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் ஒரு ரன்னிலும், ஜெகதீசன் எட்டு ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின் களமிறங்கிய பாபா அபரஜித், கேப்டன் தினேஷ் கார்த்திக்குடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அபரஜித் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிட்டையர் ஹர்ட் ஆக, அவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. தமிழ்நாடு அணி சார்பில் தினேஷ் கார்த்திக் 33 ரன்களையும், முகமது 34 ரன்களையும் எடுத்தனர். கேரளா அணி சார்பில் பசில் தம்பி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து கடின இலக்குடன் களமிறங்கிய கேரளா அணியின் கேப்டன் உத்தப்பா(9), விஷ்ணு வினோத்(24) ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின் சிறிது நிலைத்து ஆடிய ரோஹன் 34 ரன்களையும், சச்சின் பேபி 32 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் பெரியசுவாமி, நடராஜனின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதுவும் கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் கேரள அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன் மூலம் கேரள அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி சார்பில் பெரியசுவாமி, நடராஜன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

  • It was a dream debut for Periyasamy as he took 3 wickets along with Natarajan, helping TN to a win against Kerala.

    Earlier, Mohammed along with Shahrukh provided fireworks towards the end after Aparajith & D Karthik shared a crucial 50-run stand. #SyedMushtaqAliTrophy pic.twitter.com/AjX7dAcEIf

    — TNCA (@TNCACricket) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் சையது முஷ்டாக் அலி டி20 தொடரின் முதல் லீக் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் குரூப் பி பிரிவு புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் அணிக்கு கேப்டனான தினேஷ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Intro:Body:

Syed Mushtaq Ali Trophy 2019-20 Tamil nadu

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.