பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் 10 வருடங்கள் கழித்து தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றது. எந்த அணி அங்கு விளையாடும்போது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த அணியே தற்போது பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட அங்குசென்றது.
இலங்கையை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் வங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி வங்காளதேசம் பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்தது. மேலும் டெஸ்ட் போட்டியை பொதுவான இடத்தில் நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷ்சன் மணி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் பாகிஸ்தானை விட இந்தியாதான் மிகமிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்ட நாடு என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், இலங்கை தொடருக்குப்பின் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்ற போதே பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம், என்றார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத்தலைவர் மஹிம் வர்மா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஷ்சன் மணி எங்களுடைய நாட்டின் பாதுகாப்பு குறித்து நீங்கள் கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், நீங்கள் முதலில் உங்கள் நாட்டின் பாதுகாப்பை எப்படி சரிசெய்வதென்று சிந்தியுங்கள். எங்களுடை நாட்டையும், பாதுகாப்பையும் கையாளும் அளவுக்கு நான்கள் திறமையானவர்கள்தான் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க:”கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்” - அறிவுரை கூறிய பாக். முன்னாள் வீரர்!