செப்டம்பர் 17 ஆம் தேதி லாகூர் ஜிம்கானாவில் தேசிய முத்தரப்பு ஒருநாள் பெண்கள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2019-ன் பிசிபி சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான பிளாஸ்டர்ஸ் அணியின் போட்டியின் போது ஆலியா ரியாஸ் ரன் அவுட் என போட்டி நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை வசைபாடினார்.
அதன் பின் ஆலியாவுக்கு ஆதரவாக நஜிஹா இச்சம்பவம் குறித்து பிளாஸ்டர்ஸ் இன்னிங்ஸின் 14 வது ஓவரில் எல்.பி.டபள்யூ முறை அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்து வேறுபாட்டைக் காட்டினார். பன்னிரண்டு ஓவர்கள் கழித்து, அலியா ரன்-அவுட் எனத் தீர்மானிக்கப்பட்ட பின்னர் நீண்ட நேரமாக நடுவரின் முடிவிற்கு கருத்து வேறுபாடு காட்டினார்.
இதனால் போட்டியின் நடுவர்கள் ரஷீத் ரியாஸ் மற்றும் அஃபியா அமின் ஆகியோர் வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான பிசிபி நடத்தை விதிகளின் 2.8 வது பிரிவை மீறியதற்காக அலியா மற்றும் நஜிஹாற்கு ஆட்டத்தின் கட்டணத் தொகையிலிருந்து 15 சதவீதத்தை பிடித்தம் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலியா, நாஜியா இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு போட்டி நடுவர்கள் விதித்த அபராதத்தை ஏற்றுக்கொண்டனர்.