வங்கதேச அணி அடுத்தாண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட மறுப்பு தெரிவித்திருந்தது.
ஏனேனில் 2009ஆம் ஆண்டு இலங்கை அணி மீதான தாக்குதலை நினைவுபடுத்தி, "உங்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த எங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அச்சமடைகிறார்கள். டெஸ்ட் போட்டியை பொதுவான இடத்தில் வைத்துக் கொள்ளலாம்” என அந்த அணி நிர்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில், இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஏன் எங்கள் அணியுடன் டெஸ்ட் தொடரை தவிர்க்க நினைக்கீறிர்கள் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்புயுள்ளது.
அவர்களின் அந்த மின்னஞ்சலில், "கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் மற்ற நாடுகளைப் போலவே கிரிக்கெட் போட்டியை நடத்த தகுதியான நாடாக மாறியுள்ளது. அப்படி இருந்தும் வங்கதேசம் ஏன் எங்கள் அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட மறுப்பு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும். ஏனெனில் இது ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டி. அதனால் போட்டியைத் தவிர்க்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் சரியான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பத்தாண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து தொடர்களிலும் பங்கேற்றது. மேலும் 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கும் உண்டானது இலங்கை அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மைதானத்தில் மைக்கேல் ஜாக்சனாக மாறிய ஆஸி. வீரர் - வைரல் புகைப்படம்