மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட், டி20 தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி கடந்த ஜூன் 28ஆம் தேதி இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக் குழுவினர் இங்கிலாந்தின் வார்செட்ஷையருக்கு வந்தவுடன் முதற்கட்டமாக அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தவிட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தயாராவதற்காக அவர்கள் டெர்பிஷையருக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அணியினருடன் ஒன்றாகச் சேர்ந்து உணவு சாப்பிட அனுமதி வழங்கப்படாததால் உணவு சாப்பிட அவர்கள் தங்களது அறையை விட்டு கீழே இறங்கி வர வேண்டாம் எனவும், அதற்கு அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கே உணவு தேடி வரும் எனவும் கூறப்படுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதியும் செளதாம்டனில் நடைபெறவுள்ளன.
மூன்று டி20 போட்டிகள் அனைத்தும் மான்செஸ்டரில் முறையே ஆகஸ்ட் 28,30 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.