23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஓமன், நேபாளம், ஹாங் காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்றன.
இதில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியும், வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரொஹைல் ரஃபிக் 113, இம்ரான் ரஃபிக் 62 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 302 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சமாளிக்க முடியாமல், 43.3 ஓவர்களில் 224 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அஃபிப் ஹோசைன் 49 ரன்கள் அடித்தார்.
-
Congratulations to Pakistan, who finish the #ETAC2019 unbeaten! 👏#BANvPAK pic.twitter.com/7FFrwiXwzH
— AsianCricketCouncil (@ACCMedia1) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congratulations to Pakistan, who finish the #ETAC2019 unbeaten! 👏#BANvPAK pic.twitter.com/7FFrwiXwzH
— AsianCricketCouncil (@ACCMedia1) November 23, 2019Congratulations to Pakistan, who finish the #ETAC2019 unbeaten! 👏#BANvPAK pic.twitter.com/7FFrwiXwzH
— AsianCricketCouncil (@ACCMedia1) November 23, 2019
பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ஹஸ்னைன் மூன்று, சைஃப் பதார், குஷ்தில் ஷா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்றது.