பாகிஸ்தானில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான கருண ரத்னே, ஓஷாடா ஃபெர்னாண்டோ சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். பின் அதிரடியாக விளையாடி வந்த கருண ரத்னே 59 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஃபெர்னாண்டோவும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய தனஞ்ஜெய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 70 ஓவர்களில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை எடுத்தது. அப்போது மழைக்காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெய எதிரணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.
-
Stumps in Rawalpindi.
— ICC (@ICC) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
There's been little action today due to the weather - Sri Lanka lost one wicket and will begin day three on 263/6. #PAKvSL SCORECARD 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/w1wzkkBX5U
">Stumps in Rawalpindi.
— ICC (@ICC) December 12, 2019
There's been little action today due to the weather - Sri Lanka lost one wicket and will begin day three on 263/6. #PAKvSL SCORECARD 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/w1wzkkBX5UStumps in Rawalpindi.
— ICC (@ICC) December 12, 2019
There's been little action today due to the weather - Sri Lanka lost one wicket and will begin day three on 263/6. #PAKvSL SCORECARD 👉 https://t.co/CKfg2Y3ATf pic.twitter.com/w1wzkkBX5U
அதன் பின்னர் இன்று 18 ஓவர்களே வீசியிருந்த நிலையில் மீண்டும் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபெற்றது. தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.
இலங்கை அணிசார்பாக தனஞ்ஜெய 72 ரன்களுடன், ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் அணி சார்பில் அசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிடி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க:முதல் ஒருநாள் கிரிக்கெட்: சென்னை வந்தடைந்த இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்!