ETV Bharat / sports

அணியிலிருந்து ஏழு பேரை கழற்றிவிட்ட பாகிஸ்தான்

author img

By

Published : Jan 16, 2020, 10:24 PM IST

Updated : Jan 17, 2020, 4:02 AM IST

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அசிஃப் அலி, ஃபகர் சமான், முகமது ஆமிர், வஹாப் ரியாஸ் உள்ளிட்ட ஏழு பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

Pakistan Squad for Bangaldesh T20 Series

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதலில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Mohammad Amir with Wahab Riyaz
முகமது ஆமிர் - வஹாப் ரியாஸ்

இதில், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற ஃபகர் சமான், ஹாரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், அசிஃப் அலி, முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், முகமது இர்பான் உள்ளிட்ட ஏழு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

அதேசமயம், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான சோயப் மாலிக், முகமது ஹபிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியில் புதுமுக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அணியில் சேர்க்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது.

harris
ஹாரிஸ் ரவுஃப்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், இதுவரை நான்கு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய ஃபார்ம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பா கூறுகையில்,

"கடைசியாக நாங்கள் விளையாடிய ஒன்பது டி20 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது ஏற்றுகொள்ள முடியாது. இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடைபெறவுள்ள வெற்றியுடன் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவோம்" என்றார்.

Pakistan squad for Bangladesh T20Is named

MORE: https://t.co/qp1JTrXISa #PAKvBAN pic.twitter.com/a2TrVepSc2

— Pakistan Cricket (@TheRealPCB) January 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஹசன் அலி, அமத் பட், இஃப்டிகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபிஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், மூசா கான், ஷதாப் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, சோயப் மாலிக், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப்

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 24ஆம் தேதி லாகூரில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: பயிற்சியில் களமிறங்கிய தோனி!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதலில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.

Mohammad Amir with Wahab Riyaz
முகமது ஆமிர் - வஹாப் ரியாஸ்

இதில், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற ஃபகர் சமான், ஹாரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், அசிஃப் அலி, முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், முகமது இர்பான் உள்ளிட்ட ஏழு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

அதேசமயம், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான சோயப் மாலிக், முகமது ஹபிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியில் புதுமுக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அணியில் சேர்க்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது.

harris
ஹாரிஸ் ரவுஃப்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், இதுவரை நான்கு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய ஃபார்ம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பா கூறுகையில்,

"கடைசியாக நாங்கள் விளையாடிய ஒன்பது டி20 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தாலும், தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது ஏற்றுகொள்ள முடியாது. இதனால், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடைபெறவுள்ள வெற்றியுடன் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்குவோம்" என்றார்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஹசன் அலி, அமத் பட், இஃப்டிகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபிஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், மூசா கான், ஷதாப் கான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, சோயப் மாலிக், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப்

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 24ஆம் தேதி லாகூரில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: பயிற்சியில் களமிறங்கிய தோனி!

Intro:Body:

Pakistan Squad for Bangaldesh T20 Series

Conclusion:
Last Updated : Jan 17, 2020, 4:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.