துபாயில் கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியின்போது, சக வீரர்களை மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடவைக்க முயற்சித்ததாக ஓமன் கிரிக்கெட் வீரர் யூசஃப் அப்துல் ரஹிம் அல் பலூஷி மீது புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தன் மீது எழுந்த புகாரை அவர் ஒப்புக்கொண்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறி அவர் நடந்துகொண்டதால் ஐசிசி அவரை அனைத்துவிதமான போட்டிகளில் பங்கேற்க ஏழு ஆண்டுகள் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையில் தான் செய்த தவறை அப்துல் ரஹிம் பலூஷி ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவருக்கான தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும். மேலும் இளம் வீரர்கள் தங்களது தவறுகளைச் சரிசெய்துகொள்வதற்காக வருங்காலத்தில் நடத்தப்படும் கல்வித் திட்டங்களில் தான் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் ஐசிசி பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:உமர் அக்மலை சஸ்பெண்ட் செய்த பிசிபி!