நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்றுமுதல் மவுண்ட் மாங்குனியில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர்கள் டாம் லாதம் 4 ரன்களிலும், டாம் பிலெண்டல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் - அனுபவ வீரர் ராஸ் டெய்லர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அணிக்கு உதவினர்.
பின்னர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஸ் டெய்லர் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கேன் வில்லியம்சன் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் நிறைவுபெற்றது.
-
STUMPS in Mount Maunganui!
— ICC (@ICC) December 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
New Zealand end day one on a solid 222/3, courtesy of an unbeaten 94 from skipper Kane Williamson 🙌
Thoughts on the #NZvPAK action so far?
SCORECARD ▶️ https://t.co/LMlsEQTtXP https://t.co/N59rijQuaI pic.twitter.com/bf7dotTaP8
">STUMPS in Mount Maunganui!
— ICC (@ICC) December 26, 2020
New Zealand end day one on a solid 222/3, courtesy of an unbeaten 94 from skipper Kane Williamson 🙌
Thoughts on the #NZvPAK action so far?
SCORECARD ▶️ https://t.co/LMlsEQTtXP https://t.co/N59rijQuaI pic.twitter.com/bf7dotTaP8STUMPS in Mount Maunganui!
— ICC (@ICC) December 26, 2020
New Zealand end day one on a solid 222/3, courtesy of an unbeaten 94 from skipper Kane Williamson 🙌
Thoughts on the #NZvPAK action so far?
SCORECARD ▶️ https://t.co/LMlsEQTtXP https://t.co/N59rijQuaI pic.twitter.com/bf7dotTaP8
இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களுடனும், ஹென்றி நிக்கோலஸ் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணி தரப்பில் சாஹீன் அஃப்ரிடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்!