இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி:
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது.
இதனால், தொடர் தோல்விகளுக்கு நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகிய நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் விளங்கினார்.
பிரித்விஷா, மயாங்க் அகர்வால் அறிமுகம்:
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இப்போட்டியின்மூலம், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்விஷா 20 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் சதம்... இந்தியா 347 ரன்கள் குவிப்பு:
இதைத்தொடர்ந்து, நான்காவது வரிசையில் களமிறங்கி நேர்த்தியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். மறுமுனையில், ஐந்தாவது வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 64 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் உட்பட 88 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 347 ரன்களைக் குவித்தது.
நியூசிலாந்துக்கு சிறந்த தொடக்த்தை தந்த ஹென்ரி நிக்கோலஸ்:
இதைத்தொடர்ந்து, 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் - ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் கப்தில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டாம் பிளண்டல் ஒன்பது ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஜான்டி ரோட்ஸ் ஸ்டைலில் ரன் அவுட் செய்த கோலி:
-
#INDvNZ King KoHli brilliant run out 🔥🔥🔥👏💪🏏🇮🇳 pic.twitter.com/J3wAQ6mKbm
— SantuAcharya (@9SSantu) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#INDvNZ King KoHli brilliant run out 🔥🔥🔥👏💪🏏🇮🇳 pic.twitter.com/J3wAQ6mKbm
— SantuAcharya (@9SSantu) February 5, 2020#INDvNZ King KoHli brilliant run out 🔥🔥🔥👏💪🏏🇮🇳 pic.twitter.com/J3wAQ6mKbm
— SantuAcharya (@9SSantu) February 5, 2020
இதையடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் - ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்த நிலையில், கோலி ஜான்டி ரோட்ஸ் ஸ்டைலில் நிக்கோலஸை ரன் அவுட் செய்து இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இதனால், நிக்கோலஸ் 11 பவுண்டரிகள் உட்பட 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வெறித்தனம் காட்டிய டெய்லர், லாதம்:
நிக்கோலஸ் ஆட்டமிழந்த போதிலும், ராஸ் டெய்லர் - கேப்டன் டாம் லாதம் ஜோடியின் அதிரடியான ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை தந்தது. குறிப்பாக, ஷர்துல் தாகூர் வீசிய 40ஆவது ஓவரில் இந்த ஜோடி 22 ரன்களைச் சேர்த்தது. அதில், லாதம் ஒரு சிக்சர் அடிக்க, மறுபக்கம் டெய்லர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சரை பறக்கவிட்டார்.
இந்த ஜோடி 138 ரன்களை சேர்த்த நிலையில், லாதம் 48 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், நியூசிலாந்து அணி 41.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டை இழந்து 309 ரன்களை எடுத்திருந்தது.
டெய்லர் சதம்... சொதப்பிய நியூசிலாந்து:
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த ராஸ் டெய்லர் 44ஆவது ஓவரில் ஒருநாள் போட்டியில் தனது 21ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஹாமில்டனில் அவர் அடிக்கும் 4ஆவது சதம் இதுவாகும்.
இதனால், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், மீண்டும் ஜிம்மி நீஷம் ஒன்பது ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த காலின் டி கிராண்ட்ஹோம் ஒரு ரன்னில் ரன் அவுட்டாக, ஆட்டம் அனல் பறந்தது.
பிறந்தநாளில் மாஸ் காட்டிய சாண்ட்னர்... தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பிளாக்கேப்ஸ்:
இதையடுத்து, இக்கட்டான நிலையில் களமிறங்கிய பர்த்டே பாய் மிட்சல் சாண்ட்னர் ஷர்துல் தாகூர் வீசிய 48ஆவது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க நியூசிலாந்து அணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. இறுதியில், நியூசிலாந்து அணி 48.1 ஓவரில் ஆறு விக்கெட்டை இழந்து 348 ரன்களை எட்டியது. இதனால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டி20 தொடரில் அடைந்த தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சேஸிங்கில் புதிய சாதனை படைத்த கிவி:
-
Hamilton, 2007 ▶️ New Zealand chase down 347 vs Australia
— ICC (@ICC) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hamilton, 2020 ▶️ New Zealand chase down 348 vs India#NZvIND pic.twitter.com/d6qOiZpiyi
">Hamilton, 2007 ▶️ New Zealand chase down 347 vs Australia
— ICC (@ICC) February 5, 2020
Hamilton, 2020 ▶️ New Zealand chase down 348 vs India#NZvIND pic.twitter.com/d6qOiZpiyiHamilton, 2007 ▶️ New Zealand chase down 347 vs Australia
— ICC (@ICC) February 5, 2020
Hamilton, 2020 ▶️ New Zealand chase down 348 vs India#NZvIND pic.twitter.com/d6qOiZpiyi
நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக, 2007இல் இதே ஹாமில்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேஸிங்கில் அந்த அணி 347 ரன்களை எட்டியதே அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் சதம் விளாசி அசத்திய ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தாத்தா,தந்தை வரிசையில் இடம்பிடித்த பேரன்...ஏசி மிலண் அணியில் மூன்றாவது மால்டினி வாரிசு!