நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் மயாங்க் அகர்வால் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் அகர்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, தொடர்ந்து வந்த பிலிப்ஸ் 13 ரன்களிலும், கேப்டன் டாம் ப்ரூஸ் 17 ரன்களிலும், டாம் ப்ளண்டல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் நிதானமாக ரன்களை சேர்த்தார். 25 ஓவர்களில் 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜார்ஜ் - கோல் இணை சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஜார்ஜ் சதம் விளாசி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் 88 ரன்களுக்குள் டாப் ஆர்டர் வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இளம் வீரர் ப்ரித்வி ஷா 2 ரன்களிலும், கேப்டன் அகர்வால் 37 ரன்களிலும், கெய்க்வாட் 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால், நடுவரிசை வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.
-
🏏💪 #IndiaA pic.twitter.com/iYDD1vZ8tR
— Krunal Pandya (@krunalpandya24) January 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏏💪 #IndiaA pic.twitter.com/iYDD1vZ8tR
— Krunal Pandya (@krunalpandya24) January 24, 2020🏏💪 #IndiaA pic.twitter.com/iYDD1vZ8tR
— Krunal Pandya (@krunalpandya24) January 24, 2020
இதையடுத்து களத்திலிருந்த இஷான் கிஷன் - விஜய் சங்கர் இணை சிறிது நேரம் போராடியது. இதில் இஷான் கிஷன் எதிர்பாராவிதமாக 44 ரன்களில் ரன் அவுட்டாக, விஜய் சங்கர் 41 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த க்ருணால் பாண்டியா அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
இறுதியாக இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதனால் நியூ. ஏ அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்டத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற நிலையில் இருக்கின்றன.
இதையும் படிங்க: பந்துவீச்சில் அரைசதம் அடித்த ஷமி