ETV Bharat / sports

#TNPL: சூப்பர் ஓவரில் திருச்சியை வீழ்த்திய மதுரை - திருச்சி வாரியர்ஸ்

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

tnpl
author img

By

Published : Jul 31, 2019, 11:56 PM IST

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் - திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய திருச்சி அணியின் தொடக்க வீரர்கள் கே. முகுந்த், முரளி விஜய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த இணை 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், முகுந்த் 32 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த அர்விந்த் அதே ஓவரிலேயே ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

tnpl
முரளி விஜய்

பின்னர் முரளி விஜய் உடன் ஜோடி சேர்ந்த மணி பாரதி சிறிது நேரம் தாக்குப்பிடித்து 12 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் திருச்சி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை எடுத்தது. முரளி விஜய் 66 பந்துகளில் 78 ரன்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மதுரை அணியில் ரஹில் ஷா, கிரண் ஆகாஷ் இரண்டு விக்கெட்டும், கவுசிக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

tnpl
மதுரை அணி

இதைத் தொடர்ந்து துரத்தலை தொடங்கிய மதுரை அணியின் தொடக்க வீரர் சரத் ராஜ் 1 ரன்னில் வெளியேறினாலும், அருண் கார்த்திக் பொறுப்புடன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தவிர்த்து ஆதித்யா 15, கேப்டன் சிஜித் 12, கர்ணவர் 6, அபிஷேக் 1 என வரிசையாக வெளியேறினர்.

எனினும் இறுதிகட்டத்தில் உறுதியுடன் ஆடிய ஜெகதீசன் கவுசிக் கடைசி வரை போராடினார். அந்த சூழலில் ஆடடத்தின் இறுதி ஓவரில் மதுரை அணியின் வெற்றிக்கு எட்டு ரன்கள் தேவை என இருந்தது. சஞ்சய் வீசிய அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் தலா ஒரு ரன்னும், அடுத்த இரண்டு பந்துகளில் தலா இரண்டு ரன்களும் கிடைத்தது.

இதன்மூலம் கடைசி இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் என்றிருந்த நிலையில் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட கவுசிக்கின் பேட்டில் பட்டு ஆஃப் சைட்டில் சென்றதால் லெக்-பையாக ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் ஆட்டத்தில் மேலும் பதற்றம் பற்றிக்கொண்டது.

ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பந்தை எதிர்கொண்ட மிதுன், அதை மிஸ் செய்யவே ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இதனால் ஆட்டத்தை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் அபிஷேக் தன்வர் அடுத்த இரண்டு பந்துகளில் சிக்சர் பறக்கவிட்டு பரவசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நான்காவது பந்தில் மிட்-விக்கெட் திசையில் மீண்டும் சிக்சர் அடிக்க முயற்சி செய்தபோது முரளி விஜயிடம் பிடிபட்டார். இரண்டு விக்கெட்டுகைளை இழந்த மதுரை அணி, நான்கு பந்துகளில் 12 ரன்களை மட்டும் குவித்தது.

tnpl
சூப்பர் ஓவரில் கலக்கிய அபிஷேக் தன்வர்

பின்னர் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய திருச்சி அணி வீரர் முரளி விஜய், அபிஷேக் வீசிய முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. பின்னர் அதற்கடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழக்க, பிரஸர் எகிறியது. மேற்கொண்டு திருச்சி அணி வீரர்கள் பெரிய ஷாட்களை ஆடாததால், சூப்பர் ஓவரில் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து மூன்று ரன்களை மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி நான்காம் இடத்துக்கு முன்னேறியது. திருச்சி அணியோ ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.