இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டி காக் நியமிக்கப்பட்டார். முன்னதாக, இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்த நாங்கள் திட்டமிட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. பின்னர், மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், கடைசி டி20 போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 36 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 135 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி டி காக்கின் சிறப்பான ஆட்டத்தால் 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டி காக் 52 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், ஐந்து சிக்சர்களுடன் 79 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
-
Captain de Kock (79*) guides South Africa to a 9-wicket win. The series ends with a 1-1 reading #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/FvhZuGfnCU
— BCCI (@BCCI) September 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Captain de Kock (79*) guides South Africa to a 9-wicket win. The series ends with a 1-1 reading #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/FvhZuGfnCU
— BCCI (@BCCI) September 22, 2019Captain de Kock (79*) guides South Africa to a 9-wicket win. The series ends with a 1-1 reading #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/FvhZuGfnCU
— BCCI (@BCCI) September 22, 2019
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், இந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துப் பிரிவுகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக செயல்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவ ஸ்கெட்ச் போட்டு தூக்குவோம் - தென்னாப்பிரிக்க வீரர்