ETV Bharat / sports

#DCvsCSK: கடைசி ஓவரில் சென்னை வெற்றி! - ரிஷப் பந்த்

டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை வெற்றி
author img

By

Published : Mar 27, 2019, 7:07 AM IST

12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லி ஃபெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி தரப்பில் பிராவோ மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியில் ராயுடு 5 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் மூன்றாவது வீரராக வந்த ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த வாட்சன், அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி, 26 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 44 ரன்களை எடுத்து, அமிஷ் மிஸ்ராவின் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரெய்னாவும் 30 ரன்னில் வெளியேறியதால் அணியின் ஸ்கோர் 10.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்களாக இருந்தது.

இதனால், சிஎஸ்கே இந்தப் போட்டியில் வெற்றி பெற 56 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டதால் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ் - தோனி அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தி வந்தனர். கடைசி ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்ததாக வேண்டிய நிலையில், கேதர் ஜாதவ் 27 ரன்களில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்த பிராவோ அந்த ஓவரின் இரண்டாவது, மூன்றாவது பந்தை வீணாக்கி சற்று பரபரப்பை ஏற்படுத்தினாலும் நான்காவது பந்தில் பவுண்ட்ரியை விளாசினார். இதனால், சென்னை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.