முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முன்பு பிசிசியின் துணைத் தலைவராக இருந்தவர். அவர் இன்று உடல்நலக்குறைவால் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், அருண் ஜேட்லியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் தங்களது ஜெர்சியில் கருப்பு நிற பட்டையை அணிந்து விளையாடவுள்ளனர்.
முன்னதாக அருண் ஜேட்லி 2009இல் பிசிசிஐயின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தது மட்டுமின்றி, 1999 - 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.