நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இதன் முதல் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை (மார்ச் 9) தொடங்கியது.
இப்போட்டியின் முதல் இருநாள் ஆட்டங்கள் மழையால் தடைபட்ட நிலையில், மூன்றாம் நாளில் ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசி., வங்கதேச அணியை பேட்டிங் ஆட பணித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 432 ரன்கள் குவித்து, வங்கதேசத்தைவிட 221 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் 200 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 107 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத வங்கதேச அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த வண்ணம்இருந்தனர்.
அந்த அணியின் மிதுன் 47 ரன்களும், சர்கார் 28 ரன்களும், கேப்டன் மமுதுல்லா 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, வங்கதேச அணி 170 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. தொடர்ந்துவந்த லிட்டன் தாஸ் ஒரு ரன் மட்டுமே எடுக்க, பின்னர் வந்த டெய்ல்-என்ட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியாக 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி, நியூசிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து அணி சார்பாக வாக்னர் ஐந்து விக்கெட்டுகளையும், போல்ட் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.
#Wagner #NZvBAN 🇳🇿🇧🇩
— BLACKCAPS (@BLACKCAPS) March 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
NZC LIVE CARD | https://t.co/FxEJoC38Ud pic.twitter.com/3GvaCovJfZ
">#Wagner #NZvBAN 🇳🇿🇧🇩
— BLACKCAPS (@BLACKCAPS) March 11, 2019
NZC LIVE CARD | https://t.co/FxEJoC38Ud pic.twitter.com/3GvaCovJfZ#Wagner #NZvBAN 🇳🇿🇧🇩
— BLACKCAPS (@BLACKCAPS) March 11, 2019
NZC LIVE CARD | https://t.co/FxEJoC38Ud pic.twitter.com/3GvaCovJfZ
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ளது.