நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மௌங்கனுய்யில் வியாழனன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் நிக்கோலஸ் ஹென்ரி 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின் களமிறங்கிய காலீன் டி கிராண்ட்ஹோம், வாட்லிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கியது. சிறப்பாக விளையடிய இருவரும் அரைசதமடிக்க நியூசிலாந்து அணி 300 ரன்களை எட்டியது. இதில் கிராண்ட்ஹோம் 65 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
-
BJ Watling tons up!
— ICC (@ICC) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He came in with New Zealand at 127/4, but his eighth Test ton has taken the team into the lead now. The hosts are 364/6, 11 runs ahead.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/fr17yn5QSj
">BJ Watling tons up!
— ICC (@ICC) November 23, 2019
He came in with New Zealand at 127/4, but his eighth Test ton has taken the team into the lead now. The hosts are 364/6, 11 runs ahead.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/fr17yn5QSjBJ Watling tons up!
— ICC (@ICC) November 23, 2019
He came in with New Zealand at 127/4, but his eighth Test ton has taken the team into the lead now. The hosts are 364/6, 11 runs ahead.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/fr17yn5QSj
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாட்லிங் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது எட்டாவது சத்ததை பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 394 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியை விட 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிசார்பில் பிஜே வாட்லிங் 119 ரன்களுடனும், மிட்சல் சாண்ட்னர் 31 ரன்களுடனும் களத்திலுள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
-
Stumps at Mount Maunganui with New Zealand on top!
— ICC (@ICC) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
They began the day 209 behind England with six wickets in hand, and they finish 41 in front with four wickets in the bag. BJ Watling batted through the day for his 119*.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/mEozD7c4NF
">Stumps at Mount Maunganui with New Zealand on top!
— ICC (@ICC) November 23, 2019
They began the day 209 behind England with six wickets in hand, and they finish 41 in front with four wickets in the bag. BJ Watling batted through the day for his 119*.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/mEozD7c4NFStumps at Mount Maunganui with New Zealand on top!
— ICC (@ICC) November 23, 2019
They began the day 209 behind England with six wickets in hand, and they finish 41 in front with four wickets in the bag. BJ Watling batted through the day for his 119*.#NZvENG ⬇️https://t.co/IdOtHFVZap pic.twitter.com/mEozD7c4NF
இதையும் படிங்க: ஒரே போஸ்ட்..! ஆல் ஓவர் இந்தியாவும் சப்போர்ட் பன்னுதே..!