கடந்த மாதம் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
அந்த தாக்குதலில் வங்கதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு பயணம் செய்து விளையாட இருந்தது. தற்போது, இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் இருநாடுகளின் கிரிக்கெட் உறவு வலிமையாக்கப்படும். வரும் செப்டம்பர் மாதம், நியூசிலாந்து- வங்கதேசம் இடையேயான தொடர் நடைபெறும்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.