இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடிவருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றிபெற்று 1-1 என சமநிலை வகிக்க, மூன்றாவது போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர் கப்தில் ஆரம்பம் முதலே பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி 17 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து காலின் முன்ரோ 6, டிம் செய்பெர்ட் 7 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கோலின் டி கிராண்ட்ஹோம் - ராஸ் டெய்லர் இணை சீரான ரன் குவிப்பில் ஈடுபட்டு நான்காவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. கிராண்ட்ஹோம் 35 பந்துகளில் 55 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசி ஆட்டமிழக்க ஆட்டம் லேசான சரிவைச் சந்தித்தது.
எனினும் ராஸ் டெய்லர் 27, ஜேம்ஸ் நீஷம் 20, மிட்சல் சாண்ட்னர் 15 என அதிரடியாக விளையாடிதால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் டாம் குர்ரான் 2, சாம் குர்ரான், பார்கின்சன், பேட்ரிக் ப்ரவுன், சகிப் மஹ்மூத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என சேஸிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் குவித்து நியூசிலாந்தை பயமுறுத்தியது. ஆனால் அதற்கு அடுத்த ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் டாம் பேண்டன் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் டாவிட் மாலன் ஜேம்ஸ் வின்ஸ் உடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார்.
அவர் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்கன் சாண்ட்னர் பந்துவீச்சில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார். இருப்பினும் அவர் அதே ஓவரில் 18 ரன்னில் அவுட்டாகினார். பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் அதிரடி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன்னில் ரன்-அவுட்டானதால் இங்கிலாந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வின்ஸ்சும் அதற்கு அடுத்த ஓவரிலேயே 49 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி சிக்கலில் மாட்டிக்கொண்டது. இங்கிலாந்து பின்வரியை வீரர்களும் சோபிக்கத் தவறியதால் அந்த அணியால் 20 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. நியூசி. பந்துவீச்சில் பெர்குசன், டிக்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
-
England lose 5️⃣ wickets in 10 runs to hand New Zealand a 14-run win in the 3rd T20I 🤯
— ICC (@ICC) November 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The hosts lead the series 2-1.
Scorecard #NZvENG ⬇️ https://t.co/kXTsSjV6Gw pic.twitter.com/lT50tjQybn
">England lose 5️⃣ wickets in 10 runs to hand New Zealand a 14-run win in the 3rd T20I 🤯
— ICC (@ICC) November 5, 2019
The hosts lead the series 2-1.
Scorecard #NZvENG ⬇️ https://t.co/kXTsSjV6Gw pic.twitter.com/lT50tjQybnEngland lose 5️⃣ wickets in 10 runs to hand New Zealand a 14-run win in the 3rd T20I 🤯
— ICC (@ICC) November 5, 2019
The hosts lead the series 2-1.
Scorecard #NZvENG ⬇️ https://t.co/kXTsSjV6Gw pic.twitter.com/lT50tjQybn
உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப்பின் இரு அணிகளும் இந்தத் தொடரில் நேரடியாக மோதுகின்றன. இதனால் இம்முறை நியூசிலாந்து அணி இங்கிலாந்தை பழிவாங்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் முதல் போட்டியில் வெற்றிபெற்று இங்கிலாந்து அதிர்ச்சி தந்தது.
ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து அணி தற்போது எழுச்சி கண்டுள்ளது. இதனால் அடுத்ததாக நேப்பியர் மைதானத்தில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும். நான்காவது போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இங்கிலாந்தை பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.