அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள், நான்கு டெஸ்ட், ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
புதிய தேர்வு குழு
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் மூன்று பேர் கொண்ட புதிய தேர்வு குழு அறிவிக்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேலும் இத்தேர்வு குழுவைத் தேர்ந்தெடுக்க மூன்று பேர் கொண்ட புதிய ஆலோசனை குழுவை பிசிசிஐ வருகிற வியாழக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு குழுவில் அஜித் அகர்கர்?
இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான அஜித் அகர்கரின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் முன்னாள் இந்திய வீரர்களான சேட்டன் சர்மா, மனிந்தர் சிங் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இதையும் படிங்க:'சாம்பியன்ஷிப் பெல்ட்டை கைப்பற்றுவதே எனது கனவு' - ரித்து போகத்