T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி பெர்முடா அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் கூப்பர், மேக்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய பென் கூப்பர் 38 பந்துகளில் 58 ரன்களையும், மேக்ஸ் 41 பந்துகளில் 58 ரன்களையும் விளாசி ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. சிறப்பாக விளையாடிய காலின் 18 பந்துகளில் 43 ரன்களை அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்முடா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் சிறிது நேரம் சிறப்பாக விளையாடி ஆலன் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் பெர்முடா அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 114 ரன்களை மட்டுமே எடுத்தது.
-
Player of the Match? Colin Ackermann, for his 18-ball 43* and 1/6 in two overs. 👏 #T20WorldCup pic.twitter.com/snWLlXQQJx
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Player of the Match? Colin Ackermann, for his 18-ball 43* and 1/6 in two overs. 👏 #T20WorldCup pic.twitter.com/snWLlXQQJx
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2019Player of the Match? Colin Ackermann, for his 18-ball 43* and 1/6 in two overs. 👏 #T20WorldCup pic.twitter.com/snWLlXQQJx
— T20 World Cup (@T20WorldCup) October 26, 2019
இதன்மூலம் நெதர்லாந்து அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய காலின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #T20WorldCup: அயர்லாந்தை வீழ்த்திய கனடா புள்ளிப்பட்டியலில் முதலிடம்!