2018-2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அதில் இந்திய அணியின் புஜாராவை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் திண்டாடினர். நான்கு போட்டிகளில் மூன்று சதம் ஒரு அரைசதம் என 521 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் இன்ஸ்டாகிராமில் பேசுகையில், ''கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் புஜாரா மிகச்சிறந்த ஆட்டத்தை ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்தினார். அவருடைய கவனத்தை எங்களால் சிதறடிக்க முடியவில்லை. இந்த முறை அவரின் விக்கெட்டை வீழ்த்த புதிய வியூகங்களைக் கண்டறிய வேண்டும். நிச்சயம் ஆடுகளத்தில் எதுவும் இல்லை. அதனால் எங்களின் திறமை அனைத்தையும் பிரயோகித்து முயற்சிப்போம்.
புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த அவருக்கு கடினமான பந்துகளை வீசவேண்டும். இந்தமுறை ஆடுகளத்தில் கொஞ்சம் பவுன்சர் ஆகும் என நினைக்கிறேன்.
அந்தth தொடருக்கு பின் 10 முதல் 15 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ளேன். ஒவ்வொரு டெஸ்ட்டிலும் எனது பந்துவீச்சைப் பற்றி தெரிந்துகொள்கிறேன். பல படிப்பினைகள் கிடைத்துள்ளன. அதில் கிடைத்த முதல் படிப்பினை என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கொடூரமானது என்பதுதான்.
ஒரு பேட்ஸ்மேன் சில நேரம் ஒருநாள் முழுவதும் பேட் செய்துகொண்டே இருப்பார். அவரின் விக்கெட்டை வீழ்த்துவது வரை நாங்கள் பந்துவீச வேண்டும். அதனை புஜாரா இருமுறை செய்துள்ளார்.
உலகின் தலைசிறந்த அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு காட்டினார்கள். ஆனால் இந்த முறை நாங்கள் தயாராக இருக்கிறோம். கொஞ்சம் அனைத்து வீரர்களும் அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளோம். ஸ்டீவ் ஸ்மித், வார்னர் அணிக்கு திரும்பியுள்ளனர். மார்னஸ் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம் என நினைக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க: ‘அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் தான் காரணம்’ - கேரி கிர்ஸ்டன்!