பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான சோயப் அக்தர் கிரிக்கெட் குறித்தும் வீரர்கள் குறித்தும் வாய்க்கு வந்ததை பேசுவது வழக்கம். பெரும்பாலும் இந்திய ரசிகர்களை சீண்டும் வகையில்தான் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கும். அந்தவகையில், தற்போது சேவாக்கின் ரசிகர்களை அவர் சீண்டியுள்ளார். சேவாக்கை விட இம்ரான் நாசிர் திறமையானவர் என அக்தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"சேவாக்கிடம் இருந்த அறிவு இம்ரான் நாசிரிடம் இல்லை என நான் நினைக்கிறேன். அதேசமயம் இம்ரான் நாசிரிடம் இருந்த திறமை சேவாக்கிடம் இல்லை. இவர்களது திறமை குறித்து எந்த ஒரு ஒப்பீடும் இல்லை. இம்ரான் நாசிர் இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டி ஒன்றில் அதிரடியாக சதம் விளாசினார். அப்போது பாகிஸ்தான் அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள் என அணியிடம் நான் கூறினேன். ஆனால், நான் சொன்னதை பாகிஸ்தான் அணி கேட்கவில்லை.
இம்ரான் நாசிர் போன்ற வீரர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியிருந்தால் சேவாக்கை விட சிறந்த வீரராக வலம்வந்திருப்பார். அவர் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் சிறப்பாக ஆடக்கூடியவர். நல்ல ஃபீல்டரும் கூட.
அவர் எப்போது சிறப்பாக ஆடினாலும் அதற்கு அப்போதைய பயிற்சியாளர் ஜாவித் மியான்தாத்தான் காரணம். மோசமாக ஆடும்போதெல்லாம், அவரை ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு மியான்தாத் டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து தகவல் அனுப்புவார். இம்ரான் போன்ற வீரரை பாகிஸ்தான் அணி சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணி அதை செய்யவில்லை" என்றார்.
இதையும் படிங்க: உலகக்கோப்பை தொடரோடு தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் - அக்த
ர்