ரஞ்சி கோப்பை மூன்றாம் சுற்று ஆட்டத்தில் பெங்கால் அணி, ஆந்திர பிரதேச அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றுவரும் நிலையில், தேசிய கிழக்கு மண்டல தேர்வு குழு அதிகாரி தேவாங் காந்தி அனுமதியின்றி வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு சென்றதினால், பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதுகுறித்து பெங்கால் அணியின் முன்னாள் கேப்டன் மனோஜ் திவாரி கூறுகையில், ஊழல் தடுப்புப் பிரிவு சட்டப்படி தேசிய தேர்வாளர் ஒருவர் அனுமதியின்றி வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு செல்ல அனுமதி கிடையாது. மேலும் அறைக்கு தேநீர் கொண்டுவருவோருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் மட்டுமே அனுமதி உள்ளது. ஆனால் இன்று காந்தி அதனை மீறியது முறையல்ல என தெரிவித்துள்ளார்.
தேவாங் காந்தி வெளியேற்றப்பட்ட பின் சில அதிகாரிகள், தேவாங் காந்தி தனது உடல் பிரச்னைக் குறித்து பெங்கால் அணியின் மருத்துவ ஆலோசகரை பார்க்கவே அங்கு சென்றார். ஆனால் அதற்குள் திவாரி, இது சட்டத்தை மீறும் செயலென்றும், இதனை ஊழல் தடுப்பு பிரிவிடம் தெரிவித்து அவரை உடனே வெளியேற்ற கேட்டுகொண்டாதாகக் கூறுகின்றனர்.
தேசிய தேர்வு குழு அதிகாரி அனுமதியின்றி பெங்கால் அணி வீரர்களின் உடைமாற்றும் அறைக்கு சென்று வெளியேற்றப்பட்டதால் கிரிக்கெட் வட்டாரங்களில் ஊழல் குறித்தான சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க:மனுஷன்யா... தாதாவை புகழ்ந்த பாக்.வீரர்