ETV Bharat / sports

நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு: கிராம மக்கள்; உறவினர்கள் நெகிழ்ச்சி! - நடராஜன் தங்கராசு

சேலம்: ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி சாதனைப் படைத்த நடராஜன் தங்கராசுவுக்கு அவரது சொந்த கிராமத்தில் வான வேடிக்கைகள், மேளதாளங்கள் என உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Natarajan was warmly welcomed by the villagers

author img

By

Published : Jan 22, 2021, 9:25 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இச்சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் பங்கேற்று, சிறப்பாக பந்து வீசி தனது அபாரத் திறனை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி, பாப்பம்பாடியில் பொது மக்கள், உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

நடராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்த கிராம மக்கள்

அப்போது, நடராஜன் உறவினர்கள் கூறுகையில், உலகளவில் எங்கள் ஊரை கொண்டு சேர்த்து நடராஜன் பெரிய பெருமை தேடித்தந்து விட்டார். சிறு வயதிலேயே அவருக்கு கிரிக்கெட் ஆர்வம் அதிகம். அதுதான் இந்த வெற்றியை அவருக்கு தந்துள்ளது.

மிகப்பெரியளவில் வரவேற்பு கொடுக்க நாங்கள் முடிவு செய்து இருந்தோம். ஆனால் கரோனா காலம் என்பதால் எளிமையான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது" என்று உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தியா திரும்பிய முகமது சிராஜ், ஹனுமா விகாரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.