இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி இந்திய மக்களால் அதிகம் ஈர்க்கப்பட்ட மனிதர்கள் வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவில் அதிக மக்களை ஈர்த்த மனிதர்கள் என்ற பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பு நாட்டிலுள்ள 40 ஆயிரம் மக்களிடையே எடுக்கப்பட்டது.
இதில் இந்தியாவில் அதிக மக்களை ஈர்த்தவர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 15.66 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 8.58 விழுக்காடு வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் இந்தப் பட்டியலில் 5.81 விழுக்காட்டையும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 4.46 விழுக்காட்டையும் பெற்றுள்ளனர்.
தற்போது இந்தத் தகவலை தோனி ரசிகர்கள், ஆதரவளர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தலைமைக்கு ஆதரவளித்த உலகக்கோப்பை நாயகன்!