இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.26) நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்றில் தமிழ்நாடு அணி - ஹிமாச்சல் பிரதேசம் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஹிமாச்சல் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அபிமன்யூ ரானா 28 ரன்களிலும், சோப்ரா 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷி தவான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். பின்னர் 35 ரன்களில் ரிஷி தவானும் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹிமாச்சல் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கும் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய சீனியர் வீரர் பாபா அபரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
-
Tamil Nadu seal a place in the semifinals! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The @DineshKarthik-led side kept their composure and beat Himachal by five wickets in the #SyedMushtaqAliT20 #QF2. 👌👌 #TNvHP | @TNCACricket
Scorecard 👉 https://t.co/84QeGusrRe pic.twitter.com/1Wo2N7bRQV
">Tamil Nadu seal a place in the semifinals! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021
The @DineshKarthik-led side kept their composure and beat Himachal by five wickets in the #SyedMushtaqAliT20 #QF2. 👌👌 #TNvHP | @TNCACricket
Scorecard 👉 https://t.co/84QeGusrRe pic.twitter.com/1Wo2N7bRQVTamil Nadu seal a place in the semifinals! 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021
The @DineshKarthik-led side kept their composure and beat Himachal by five wickets in the #SyedMushtaqAliT20 #QF2. 👌👌 #TNvHP | @TNCACricket
Scorecard 👉 https://t.co/84QeGusrRe pic.twitter.com/1Wo2N7bRQV
அவருடன் ஜோடி சேர்ந்த ஷாரூக் கானும் பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் 17.5 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹிமாச்சல் பிரதேசம் அணியை வீழ்த்தி, சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
-
Punjab march into the semifinals! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Mandeep Singh-led unit put up a fine show and beat Karnataka by nine wickets at the Motera Stadium in the #QF1 of the #SyedMushtaqAliT20. 👍👍 #KARvPUN
Scorecard 👉 https://t.co/pOwe3Zwyuo pic.twitter.com/Yt3Cns6S7b
">Punjab march into the semifinals! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021
The Mandeep Singh-led unit put up a fine show and beat Karnataka by nine wickets at the Motera Stadium in the #QF1 of the #SyedMushtaqAliT20. 👍👍 #KARvPUN
Scorecard 👉 https://t.co/pOwe3Zwyuo pic.twitter.com/Yt3Cns6S7bPunjab march into the semifinals! 👌👌
— BCCI Domestic (@BCCIdomestic) January 26, 2021
The Mandeep Singh-led unit put up a fine show and beat Karnataka by nine wickets at the Motera Stadium in the #QF1 of the #SyedMushtaqAliT20. 👍👍 #KARvPUN
Scorecard 👉 https://t.co/pOwe3Zwyuo pic.twitter.com/Yt3Cns6S7b
முன்னதாக, முதலாவது காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் கர்நாடகா அணி - பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதையும் படிங்க:வெ.இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்!