ETV Bharat / sports

தோனிக்கு ஃபிட்னெஸ் போச்சு; முன்ன இருந்த கெத்து இல்ல: ரோஜர் பின்னி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, தனது ஃபிட்னெஸை இழந்துவிட்டார் என முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

ms-dhoni-has-lost-a-bit-of-fitness-roger-binny

author img

By

Published : Aug 2, 2020, 2:22 PM IST

2019ஆம் ஆண்டுக்கு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தல தோனி சர்வதேச கிரிக்கெட்டில் தலைகாட்டவில்லை. மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் எதிர்பாராவிதமாக கரோனா வைரஸ் பரவலால் ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் ஆடமாட்டார் என்ற கருத்து சொல்ல பலருக்கும் சாதமாக சூழல் மாறியது. இதனிடையே செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக தோனி மீண்டும் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் ரோஜர் பின்னி தோனி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், '' தோனியின் ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்துவிட்டது. அதே நேரத்தில் இளம் வீரர்களும் அணிக்குள் வந்துவிட்டனர். அதனால் அவரின் இடத்தை இளம் வீரருக்கு கொடுத்துவிட்டு விலக வேண்டும்.

அதேபோல் அவரின் ப்ரைம் ஃபார்ம் நேரத்தை கடந்துவிட்டதாக கருதுகிறேன். கடந்த இரு சீசன்களில் அவரின் ஆட்டம் அதைதான் கூறுகிறது. அவரின் திறமைக்கேற்ப அவர் ஆடவில்லை'' என தெரிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்னதாக ப்யூஷ் சாவ்லா தோனி பற்றி பேசுகையில், ''பெரிய இடைவெளிவிட்டு கிரிக்கெட்டிற்கு திரும்பும் வீரர்கள் எப்போதும் இருக்கமாக இருப்பார்கள். அவர்களின் ஆட்டம் கொஞ்சம் சோர்வாக காணப்படும். ஆனால் சிஎஸ்கே அணி பயிற்சியின்போது தோனி மிகவும் சாதாரணமாக இருந்தார். அவர் பயிற்சி செய்யும்போது நான்கு முதல் ஐந்து பந்துகள் எதிர்கொண்டால், அடுத்த பந்து சிக்சருக்கு செல்லும். அதுதான் சிஎஸ்கே பயிற்சியில் நடந்தது. தினமும் 200 முதல் 250 பந்துகளை எதிர்கொண்டார்'' என்றார்.

தோனி பழைய ஃபார்மில் உள்ளாரா, இல்லையா என்பது ஐபிஎல் தொடர் தொடங்கினால் தெரிந்துவிடும். அதுவரை தோனி பற்றிய பேச்சுகள் தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கும்.

இதையும் படிங்க: இனிதான் எனது ஆட்டம் ஆரம்பம் - டேவிட் வில்லி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.