கரோனா பெருந்தொற்றால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, விளையாட்டு வீரர்கள் சமூக வலை தளங்களில், தங்களது நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் இணைந்தார்.
அதில் பேசிய மோஹித், ' தோனி ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் எப்போதும் தன்னை எளிமையானவராகவும், பண்பாளராகவும் வைத்துக் கொள்பவர். நீங்கள் அவரிடம் பேசும்பொழுதுகூட, உங்களுக்கு எந்த வித தடுமாற்றங்களும் ஏற்படாது. அவர் எப்போதும் இயற்கையோடு ஒன்றி வாழக்கூடிய மனிதர். நான் அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடியுள்ளேன். அதேபோல், உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாட ஆசை கொண்டிருப்பர்.
தோனி எப்போதும் அணிக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பவர். எப்போதெல்லாம் அணி தோல்வியடைகிறதோ அப்போது எல்லாம் பத்திரிகையாளர் அமர்வுகளில் கலந்து கொண்டு, தோல்விக்கானப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். ஆனால், அணி வெற்றிபெறும் போதெல்லாம் சக வீரர்களை பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அனுப்பி வைப்பார்.
எங்களது முழு அணியும் தோனியின் பார்வையைப் புரிந்து அதற்கேற்றார் போல் செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்த இந்திய வீரருக்கு பந்துவீசுவதுதான் கடினம்: பட் கம்மின்ஸ்!