ETV Bharat / sports

விளையாட்டு மீதான பயத்தால் விலகிய கிரிக்கெட் வீரர்! - விளையாட்டு மீதான பயத்தால் விலகிய கிரிக்கெட் வீரர்

தனக்கு விளையாட்டு மீது ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகுவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அறிவித்துள்ளார்.

MP batsman aryaman birla
MP batsman aryaman birla
author img

By

Published : Dec 21, 2019, 5:00 AM IST

கிரிக்கெட் என்பது இந்தியாவில் ஒரு மதமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆர்வம் சில இளைஞர்களுக்கு பொழுதுபோக்காகவும், சிலருக்கு எதிர்காலமாகவும் மாறிவிடுகிறது. அவ்வாறு கிரிக்கெட்டை எதிர்காலமாகத் தேர்வு செய்யும் பலரில் சிலருக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கிறது. அதிலும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பதே பெரும் கனவாக இருக்கும்.

ஐபிஎல் டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்ட பின் சில இளம் வீரர்களின் கனவுகள் நினைவாக மாறியது. இதனிடையே ஐபிஎல் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல இளம் இந்திய வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெரிய தொழிலதிபரான மங்களம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா, தனக்கு விளையாட்டு மீது ஏற்பட்ட பயம், பதட்டத்தால் கிரிக்கெட்டிலிருந்து காலவரையின்றி விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த நிலையை அடைய கடின உழைப்பும், மன தைரியமும் தேவை எனவும் பதிவிட்டிருந்தார். மேலும், தான் இதில் மாட்டிக்கொண்டேன். எனவே இதில் இருந்து வெளிவர கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

MP batsman aryaman birla
ஆர்யமான் பிர்லாவின் பதிவு

மேலும் இந்தத் தருணம் கடினமாக உள்ளது. ஆனால் இது உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவியது. நிச்சயம் இதைவிட பலம் வாய்ந்த ஒருவனாக மாறுவேன் என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

2017ஆம் ஆண்டு, முதல் தரப் போட்டியில் அறிமுகமான ஆர்யமான், ஒன்பது போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் அதிகபட்சமாக 103 ரன்களை எடுத்திருக்கிறார். இது தவிர கடந்த இரண்டு சீசன்களில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஆர்யமானை, இந்த ஏலத்திற்கு முன்பாக விடுவித்தனர்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி வாழ்க்கையை எடுத்துக்கூறும் புத்தகம் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.