ETV Bharat / sports

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது அமீர்! - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (டிசம்பர் 17) அறிவித்தார்.

Mohammad Amir retires from international cricket, confirms PCB

author img

By

Published : Dec 17, 2020, 4:38 PM IST

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது அப்போதைய கேப்டன் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமிர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களுக்கு தடை விதித்தது ஐசிசி. இவர்களில் முகமது அமிர் 5 ஆண்டு தண்டனை காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு மீண்டும் அணிக்குத் திரும்பினார். அதன்பின் சிறப்பாக விளையாடி வந்த முகமது அமீர், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு:

இதையடுத்து, காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த முகமது அமீர், தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியிலும் சேர்க்கப்படாமல் இருந்தார். அதன்பின் இலங்கையின் டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடி வந்தார்.

  • JUST IN: PCB have confirmed that Mohammad Amir has stepped down from international cricket.

    🇵🇰 147 internationals
    ☝️ 259 wickets
    🎖️ 2009 @T20WorldCup champion
    🏆 2017 ICC Champions Trophy winner

    What is your favourite moment of the Pakistan pace bowler? pic.twitter.com/ilUAaZxSrM

    — ICC (@ICC) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு அதிக அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாக கூறி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார்.

இளம் வயதில் ஓய்வு:

தற்போது 28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தான் அணிக்காக 32 டெஸ்ட், 60 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இவர் கடந்தாண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இதனிடையே, முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க:சயீத் முஷ்டாக் அலி தொடருக்கான மைதானங்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.