ETV Bharat / sports

கரோனா தொற்று இல்லை - இங்கிலாந்தில் பயிற்சியில் இணையும் முகமது அமீர்!

author img

By

Published : Jul 24, 2020, 10:27 PM IST

கராச்சி: இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Mohammad Amir cleared to join side in England
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், மாஸ்யூர், முகமது இம்ரான் ஆகிய வீரர்கள் இங்கிலாந்திலுள்ள டெர்பிசைரில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்க விரைவில் அனுப்பபடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

28 வயதாகும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். இவரது இந்த முடிவை பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-கக் உள்பட மூத்த வீரர்கள் பலரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தனர்.

அத்துடன், நல்ல உடற்தகுதியுடன் இருந்தால் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடவிருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட முகமது அமீருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர் .

இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முகமது அமீர், ஐந்து ஆண்டு தடைக்கு பிறகு மீண்டும் விளையாட வந்தபோது ஏதேனும் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்க வேண்டும். மாறாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடியதால் காயம், உடற்தகுதி போன்று பிரச்னைகள் ஏற்பட்டது.

ஆனால் தற்போது நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை நன்றாக விளையாடுவேன் என எனக்கு நம்பிக்கை வந்துள்ளது என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.