ETV Bharat / sports

மீண்டும் பாகிஸ்தான் அணியில் இணையும் அமீர்!

author img

By

Published : Jul 20, 2020, 6:20 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.

Mohammad Amir available to join Pakistan squad for England tour

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான 24 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக, இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

கடந்த வாரம் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, தற்போது இங்கிலாந்து தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அமீரின் விருப்பத்தை ஏற்று, இங்கிலாந்து செல்ல அனுமதித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'அமீர் மற்றும் இம்ரான் இருவரும் கரோனா கண்டறிதல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இச்சோதனை முடிவில் அவர்களுக்கு தொற்று இல்லை என வந்தால் மட்டுமே அவர்களை, இங்கிலாந்தில் விளையாட அனுமதிப்போம்' என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: செப்டம்பரில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா தொடர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.