ETV Bharat / sports

'வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்' - நடராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

இந்திய அணிக்காக அறிமுகமாகிய முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழ்நாடு வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MK Stalin wish for Natrajan
MK Stalin wish for Natrajan
author img

By

Published : Dec 2, 2020, 7:11 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் தமிழ்நாடு வீரர் நடராஜன், அறிமுகமானார். தனது அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் நடராஜனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவு மூலம் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • #TeamIndia கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் @Natarajan_91 அவர்களுக்கு வாழ்த்துகள்!

    வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்! pic.twitter.com/gzVidJXv5L

    — M.K.Stalin (@mkstalin) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது பற்றி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:‘நடராஜன் இந்திய அணியில் விளையாடுவது எங்கள் ஊருக்கே பெருமை’ - தாயார் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.