2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வெல்வதற்கு லியம் ப்ளென்கட் முக்கிய காரணமாக இருந்தார். சமீபத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக ஆடுவேன் என லியம் ப்ளென்கட் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் லியம் ப்ளென்கட் இந்த முடிவு எடுத்தார் என்பது பற்றி விசாரிக்கையில், சமீபத்தில் இங்கிலாந்து அணி வீரர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் 55 பேர் கலந்துகொண்டனர். அதில் லியன் ப்ளென்கட்டிற்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என தெரிகிறது.
இந்நிலையில் லியம் ப்ளென்கட் அணியிலிருந்து நீக்கப்பட்டது கவலையளிப்பதாக முன்னாள் கேப்டன் மைக்கெல் வாஹன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசுகையில், ''அவர் இங்கிலாந்து அணிக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
ஆனால் அதன்பின் அவரிடம் நிர்வாகம் சார்பாக யாருமே அழைத்து பேசவில்லை. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டது கூட ட்விட்டரைப் பார்த்து தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது மிகவும் கவலையளிக்கிறது. இது யாருக்கும் நடக்கக் கூடாது. இங்கிலாந்து நிர்வாகத்தின் இந்த செயல் கீழ்த்தரமானது. இங்கிலாந்து அணிக்காக ஆடிவரும் வேகப்பந்துவீச்சாளர்களில் லியம் மிகவும் முக்கியமானவர்'' என்று கூறியுள்ளார்.