ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்டார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேடின்சன் இணை தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக விளையாடிய மேடின்சன் 40 ரன்களில் வெளியேற, மறுமுனையில் அதிரடியில் வெளுத்து வாங்கிய ஸ்டோய்னிஸ் அரைசதமடித்து அசத்தினார். இறுதி வரை ஆட்டமிழக்காத ஸ்டோய்னிஸ் 54 பந்துகளில் நான்கு சிக்சர்கள், ஏழு பவுண்டரிகள் உட்பட 81 ரன்களை குவித்தார்.
-
Marcus Stoinis brings up his fifty in style, from just 28 balls.
— cricket.com.au (@cricketcomau) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
LIVE: https://t.co/LjKTXnEIPS #BBL09 pic.twitter.com/0YyQLAWLh1
">Marcus Stoinis brings up his fifty in style, from just 28 balls.
— cricket.com.au (@cricketcomau) December 22, 2019
LIVE: https://t.co/LjKTXnEIPS #BBL09 pic.twitter.com/0YyQLAWLh1Marcus Stoinis brings up his fifty in style, from just 28 balls.
— cricket.com.au (@cricketcomau) December 22, 2019
LIVE: https://t.co/LjKTXnEIPS #BBL09 pic.twitter.com/0YyQLAWLh1
இதன் மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களை எடுத்தது. எதிரணி தரப்பில் ரிலே மெரிடித் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஷார்ட், மெக்டெர்மொட், மில்லர், ரைட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியெறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ஸ்டார்ஸ் அணியின் ஹரிஸ் ரவூப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியன் திரும்பினர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பாக ஹரிஸ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
-
Five of the best from @HarisRauf14 for the @StarsBBL in Moe! @Dream11 | #BBL09 pic.twitter.com/4ROomjOxz6
— KFC Big Bash League (@BBL) December 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Five of the best from @HarisRauf14 for the @StarsBBL in Moe! @Dream11 | #BBL09 pic.twitter.com/4ROomjOxz6
— KFC Big Bash League (@BBL) December 22, 2019Five of the best from @HarisRauf14 for the @StarsBBL in Moe! @Dream11 | #BBL09 pic.twitter.com/4ROomjOxz6
— KFC Big Bash League (@BBL) December 22, 2019
இதன்மூலம் ஹொபர்ட் ஹரிகேன்ஸ் அணி 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இத்தொடரில் தொடர்ந்து தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய ஹரிஸ் ரவூப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது..! தொடரை வெல்லப்போவது யார்...!