கிரிக்கெட் போட்டியில், பவுலர்கள் பந்தை ஸ்வீங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை போல்ட் செய்வதுதான் பந்துவீச்சாளர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சி தரும். அந்தவகையில், ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷுட்டின் பந்துவீச்சு, இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரையும் ஒவர்டேக் செய்யும் அளவில் இருக்கிறது.
2012 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் புவனேஷ்வர் குமார் (புவி), ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். தனது முதல் பந்துவீச்சிலேயே அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹஃபிஸை அவுட் செய்தார். அதில், ஆச்சரியம் என்னவென்றால், அவர் வீசிய பந்து இன்ஸ்விங் ஆக, அது ஆஃப் ஸ்டெம்பை தாக்கியது.
ஆஸ்திரேலியாவில் மகளிர் அணிகளுக்கு இடையிலான நேஷனல் கிரிக்கெட் லீக் தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக, ஸ்டேட்வைட் சூப்பர் எஸ்.ஏ ஸ்கார்பியன்ஸ் அணி, குவின்ஸ்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில், ஸ்கார்பியன்ஸ் அணி தரப்பில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீராங்கனை மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, இவரது பந்துவீச்சைக் கண்டு குவின்ஸ்லாந்து அணியின் கேப்டன் கிர்பி ஷார்ட் வாயடைத்து போய் உள்ளார்.
-
🤯 @megan_schutt #WNCL pic.twitter.com/F1IEb5fyb9
— Statewide Super SA Scorpions (@ScorpionsSA) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🤯 @megan_schutt #WNCL pic.twitter.com/F1IEb5fyb9
— Statewide Super SA Scorpions (@ScorpionsSA) August 19, 2019🤯 @megan_schutt #WNCL pic.twitter.com/F1IEb5fyb9
— Statewide Super SA Scorpions (@ScorpionsSA) August 19, 2019
ஏனெனில், அவர் வீசிய பந்து ஆடுகளத்தில் குத்தி காற்றின் மூலம் இன்ஸ்விங் ஆகியதால் அது மிடில் ஸ்டெம்பை தாக்கியது. இந்த விக்கெட்டை பார்த்தால் புவனேஷ்வர் குமாரின் விக்கெட்டை மிஞ்சும் வகையில் உள்ளது. இதில், புவி, மேகன் ஷூட் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொண்ட முகமது ஹபிஸ், கேர்பி ஷார்ட் இருவரும் டிஃபெண்ட் செய்யாமல் பந்தை விட்டதும் மட்டுமின்றி, தங்களது விக்கெட்டையும் இவர்கள் பறிகொடுத்ததுதான் இதன் சிறப்பம்சம்.
இன்ஸ்விங்கில் அசத்தலாக போல்ட் செய்த மேகன் ஷூட்டின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக இவர், 54 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளும், 50 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.