ETV Bharat / sports

ஹாசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளிய ஆஸி. மகளிர் அணித் தலைவி! - #மெக் லனிங்

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் மெக் லனிங் அதிவேக 13 ஒருநாள் சதமடித்தவர்கள் பட்டியலில் ஹாசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

#meg lanning ஹாசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளிய ஆஸி.மகளிர் அணித் தலைவி
author img

By

Published : Sep 6, 2019, 1:21 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் டக் அவுட்டில் வெளியேறினார். அதன் பின் மற்றொரு தொடக்க வீரங்கனையான அலிஸா ஹீலியுடன் ஜோடி செர்ந்த கேப்டன் மெக் லனிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் மெக் லனிங் அலிஸா ஹீலி ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய அலிஸா ஹீலி 106 பந்துகளில் 12 பவுண்டர்கள் இரண்டு சிக்சர்கள் உட்பட 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த மெக் லனிங் தனது 13 ஆவது ஒருநாள் சத்ததை பதிவு செய்தார். இச்சதத்தை இவர் 76 ஆவது இன்னிங்ஸில் பூர்த்தி செய்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்க அணியின் ஹாசிம் ஆம்லா தனது 13ஆவது ஒருநாள் சதத்தை 83 இன்னிங்ஸில் அடித்ததே சாதனையாக இருந்தது.

தற்போது மெக் லனிங் அச்சாதனையை 76 இன்னிங்ஸில் அடித்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களை சேர்த்தது. இதில் மெக் லனிங் 145 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உட்பட 121 ரன்களை விளாசினார்.

அதன் பின் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.