ETV Bharat / sports

தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த மேக்ஸ்வெல் - ஹெலிக்காப்டர் ஷாட் அடித்த மேக்ஸ்வெல்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தோனியைப் போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்த காட்சி வெளியாகியுள்ளது.

maxwell
author img

By

Published : Oct 28, 2019, 11:23 PM IST

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களில் அதிரடி ஆட்டத்தால் இலங்கை பந்துவீச்சாளர்களைச் சிதறடித்தனர்.

கேப்டன் பின்ச்சிற்கு பின்வந்த மேக்வெல் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பவுண்டரிகளும் சிக்சருமாக விளாசித்தள்ளினார். அப்போது ரஜித்தா வீசிய 18ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்சர் அடித்த அவர் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் இந்திய வீரர் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் பாணியில் அந்த சிக்சரை விளாசினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த பந்திலும் அதே பாணியில் சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்கள் (ஏழு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள்) அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். தோனி பாணியில் மேக்ஸ்வெல் சிக்சர் அடிக்கும் காட்சிகள் ட்விட்டரில் பதிவிடப்பட்டது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.

நேற்றைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்த 234 ரன்களைக் குவித்தது. வார்னர் சதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியுற்றது.

Intro:Body:

maxwell hit helicopter shots

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.