இந்தியாவில் நடைபெறும் டி20 ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. இதில் ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்கள் போட்டி போட்டு வாங்கியது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட 332 வீரர்களில் 62 வீரர்கள் வாங்கப்பட்டனர்.
இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. இதில் இறுதியாக பஞ்சாப் அணி 10.75 கோடிக்கு மேக்ஸ்வெல்லை தனது அணிக்கு ஒப்பந்தமாக்கியது.
-
HIGH RATED GABRU! 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome to #SaddaSquad, Glenn Maxwell! ♥#SaddaPunjab #SaddeKings #IPLAuction #IPL2020Auction pic.twitter.com/a98brVcCSv
">HIGH RATED GABRU! 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) December 19, 2019
Welcome to #SaddaSquad, Glenn Maxwell! ♥#SaddaPunjab #SaddeKings #IPLAuction #IPL2020Auction pic.twitter.com/a98brVcCSvHIGH RATED GABRU! 😍
— Kings XI Punjab (@lionsdenkxip) December 19, 2019
Welcome to #SaddaSquad, Glenn Maxwell! ♥#SaddaPunjab #SaddeKings #IPLAuction #IPL2020Auction pic.twitter.com/a98brVcCSv
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலமைப் பயிற்சியாளர் அனில் கும்ளே, 'மேக்ஸ்வெல்லை எங்கள் அணிக்கு வாங்கியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இது அவருக்கு டி20 உலகக்கோப்பைக்கு ஒரு பயிற்சியாக அமையும். அவர் பேட்டிங் மட்டுமில்லாமல், பீல்டிங், பந்துவீச்சு என முப்பரிமாணங்களிலும் சிறந்து விளங்குபவர். அவர் எங்கள் அணியின் முக்கிய இடங்களை நிரப்புவார் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் கடந்த மதம் உளவியல் பிரச்னை காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விடுப்பு எடுத்து, தற்போது பிக் பாஷ் டி20 தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் ஏலம்: ட்விட்டரில் சிஎஸ்கே செய்த மீம்ஸ் குறும்பு!