பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவித் உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து அவர் கூறுகையில், "கடந்த காலங்களில் ஐபிஎல் தொடர்களிலும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் மாஃபியாவுக்கு எதிராக செயல்பட யாருக்கும் தைரியமில்லை.
மேட்ச் ஃபிக்ஸிங் மஃபியா இந்தியாவுக்கு தொடர்புடையது. மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டால் அதிலிருந்து வெளியே வர முடியாது. மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து கேள்வி கேட்டதால்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து நான் தொடர்ந்து பேசினால், என்னை துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என மிரட்டினார்கள்.
ஃபிக்ஸிங்கிற்கு எதிராக குரலை உயர்த்தினால், அதன்பின் குறிப்பிட்ட அளவில் மட்டுமே போட்டிகளில் விளையாட முடியும். அதனால்தான் என்னால் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முடியவில்லை" என்றார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆகிப் ஜாவித் பாகிஸ்தான் அணிக்காக 1989 முதல் 1998 வரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளையும், 163 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது... வேதனையில் தென் ஆப்பிரிக்க வீரர்