இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தாக்கத்திலிருந்து இந்திய ரசிகர்களும் நியூசிலாந்து வீரர்களும் இன்னும் மீளவில்லை. அரையிறுதிப் போட்டியில் தோனியை ரன் அவுட் செய்ததால்தான் அதன் கர்மாவாக மார்டின் கப்தில் இறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆனார் என்ற கட்டுக்கதைகளும் பேசப்பட்டுவருகின்றன.
2019 உலகக்கோப்பைத் தொடரில் மோசமான ஃபார்மில் இருந்த கப்தில், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரில் ஏன் களமிறங்கப்பட்டார்? என்று புலம்பாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். நியூசிலாந்து அணியில் மெக்கல்லமிற்கு அடுத்தபடியாக ஸ்ட்ரைட் திசையில் சிக்சர் அடிக்கும் ஒரே வீரர் கப்தில்தான். இதனால்தான் என்னமோ கப்தில் சூப்பர் ஓவரில் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
2019 உலகக்கோப்பைத் தொடரின் வில்லன் கப்தில்தான் என அவரை விமர்சிக்கும் ரசிகர்கள் கொஞ்சம் நான்கு ஆண்டுகளுக்கு முன் 2015 உலகக்கோப்பைத் தொடரில் அவரது ஆட்டத்தைப் வாய் பிளந்துதான் பார்ப்பார்கள். ஏனெனில் 2015 உலகக்கோப்பைத் தொடரின் நாயகனே கப்தில்தான். அந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் 547 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
1992-க்குப் பிறகு 2015இல்தான் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் உலகக்கோப்பைத் தொடர் நடைபெற்றது. 2015 மார்ச் 21இல் வெலிங்டனில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, இரண்டுமுறை முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கப்தில், ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதகளப்படுத்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்ட அவரை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் சமாளிக்க முடியாமல்போனது.
இதனால், 35ஆவது ஓவரில் கப்தில் சதம் விளாசினார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் பேக்-டூ-பேக் இரண்டாவது சதம் இதுவாகும். இதன்மூலம், உலகக்கோப்பைத் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் 41ஆவது ஓவரில் 150 ரன்களைக் கடந்தபோது அவரது பேட்டிங், அடுத்த கியருக்குச் சென்றது. குறிப்பாக, ஜெரோம் டெய்லர் வீசிய 45ஆவது ஓவரில் அவர் மூன்று சிக்சர், ஒரு பவுண்டரி என 27 ரன்களைச் சேர்த்தார்.
இதனால், அவர் இரட்டைச்சதம் அடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன. அதற்கு ஏற்றார்போல் அதிரடியாக விளையாடி வந்த அவர், ரசல் வீசிய 48ஆவது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த கையோடு 152ஆவது பந்தில் தனது முதல் இரட்டைச்சதம் விளாசினார்.
இதன்மூலம், உலகக்கோப்பைத் தொடரில் இரட்டைச் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆட்டத்தின் இறுதியில் அவர் 163 பந்துகளில் 24 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் என 237 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
-
📽️ Watch the highlights of his 🤩 innings! https://t.co/rmzBthg7j6
— ICC (@ICC) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📽️ Watch the highlights of his 🤩 innings! https://t.co/rmzBthg7j6
— ICC (@ICC) March 21, 2020📽️ Watch the highlights of his 🤩 innings! https://t.co/rmzBthg7j6
— ICC (@ICC) March 21, 2020
அவரது சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பம்சம் என்னவென்றால், ரோஹித் சர்மாவை போல இவருக்கும் இரட்டைச்சதம் அடிக்க வாய்ப்பு எதிரணிகளால் அமைந்தது.
2014இல் ரோஹித் சர்மா நான்கு ரன்களில் இலங்கை அணிக்குத் தந்த கேட்சை தவறவிட்டனர். அதன் விளைவு ரோஹித் சர்மா 264 ரன்கள் குவித்தார். அதேபோல, இப்போட்டியிலும் நான்கு ரன்கள் எடுத்திருந்த கப்தில் ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே சாமுவேல் பத்ரியிடம் கேட்ச் வழங்கினார்.
ஆனால், பத்ரி அந்த வாய்ப்பை தவறிவிட்டது மிகப்பெரிய தவறு என்பது ஆட்டத்தின் முடிவில்தான் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு தெரியவந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கப்தில் வாணவேடிக்கை நிகழ்த்தி இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையும் படிங்க: ‘அந்த நாளை மறக்கவேமாட்டேன்’ - கப்தில்