2019ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரின் 34ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து மெல்போர்ன் அணியில் தொடக்கவீரர்களாக ஸ்டோய்னிஸ், ஹில்டன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து ஹில்டன் அரைசதமடித்து அசத்த அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
-
The @StarsBBL finish on 1-219 with Marcus Stoinis unbeaten on 147! #BBL09
— cricket.com.au (@cricketcomau) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Check out this scorecard: https://t.co/JtIPf1vx9G pic.twitter.com/vQ0Nkc3O4P
">The @StarsBBL finish on 1-219 with Marcus Stoinis unbeaten on 147! #BBL09
— cricket.com.au (@cricketcomau) January 12, 2020
Check out this scorecard: https://t.co/JtIPf1vx9G pic.twitter.com/vQ0Nkc3O4PThe @StarsBBL finish on 1-219 with Marcus Stoinis unbeaten on 147! #BBL09
— cricket.com.au (@cricketcomau) January 12, 2020
Check out this scorecard: https://t.co/JtIPf1vx9G pic.twitter.com/vQ0Nkc3O4P
சிறப்பாக விளையாடி வந்த ஹில்டன் 59 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி காட்டிவந்த ஸ்டோய்னிஸ் 79 பந்துகளில் எட்டு சிக்சர்கள், 13 பவுண்டரிகளுடன் 147 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 219 ரன்களை சேர்தது. இந்தப் போட்டியில் ஸ்டோய்னிஸ் 147 ரன்கள் குவித்ததன் மூலமாக பிபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்து அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இமாலய இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் நட்சத்திர வீரர்களான பிலீப், டேனியல், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்னி அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹென்ரிக்ஸ் 41 ரன்களை எடுத்திருந்தார்.
-
A historic night at the @MCG!
— KFC Big Bash League (@BBL) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
▪ Highest ever BBL individual score
▪ Highest ever BBL partnership
▪ Third highest ever BBL team score#BBL09 pic.twitter.com/bSCjpdCk9Q
">A historic night at the @MCG!
— KFC Big Bash League (@BBL) January 12, 2020
▪ Highest ever BBL individual score
▪ Highest ever BBL partnership
▪ Third highest ever BBL team score#BBL09 pic.twitter.com/bSCjpdCk9QA historic night at the @MCG!
— KFC Big Bash League (@BBL) January 12, 2020
▪ Highest ever BBL individual score
▪ Highest ever BBL partnership
▪ Third highest ever BBL team score#BBL09 pic.twitter.com/bSCjpdCk9Q
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி அணியை வீழ்த்தி தனது எட்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: இந்தியாவின் ஒலிம்பிக் ஆசை - ஒலிம்பிக் நடத்திய நாடுகளின் நிலை...