கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பெருந்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விளையாட்டு வீரர்களும் தாங்களே முன்வந்து சுயத் தனிமைப்படுத்துதலில் இருக்கின்றனர். இதில் ஒரு சில வீரர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், தனது சிறுவயது முதல் இதுநாள் வரை என்னுடைய ஹீரோ வாக நினைப்பது ரிக்கி பாண்டிங்கை மட்டுமே என்று தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து பேசிய ஸ்டோய்னிஸ், ”எனது சிறு வயது முதல் என்னுடைய ஹீரோவாக இருப்பவர் ரிக்கி பாண்டிங்தான். அதேசமயம் நான் வளர்ந்த பிறகு மேத்யூ ஹைடனைப் போல ஒரு பேட்ஸ்மேனாக விளையாட வேண்டுமென நினைத்துள்ளேன். மேலும் இந்தியன் பிரீமியர் லீக், பிக் பேஷ் லீக் ஆகியவை உலகின் மிகவும் வலுவான இரண்டு டி20 தொடர்கள். இவை இரண்டையும் ஒப்பிடுவது என்பது கடினமான கரியமாகும்.
தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பெரும் இழப்புகள் ஏற்படுகின்றன. இச்சமயத்தில் நாங்கள் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். நான் தற்போது பெர்த்தில் உள்ளேன். இங்கு அனைவரும் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறாமல் உள்ளனர். மேலும் எங்களை உடற்பயிற்சிக்கும், நடைபயிற்சிக்கும் மட்டுமே வெளியே செல்ல அனுமதியளித்துள்ளனர். இருந்தாலும் பெரும்பாலானோர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.
-
Versatile on the field, humorous and witty off the field! @MStoinis bowled us over in a fun #InstagramLIVE session with his quirky replies 💡
— Delhi Capitals (Tweeting from Home🏠) (@DelhiCapitals) April 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
P.S. Thank you for gatecrashing our LIVE, @DavidWarner31 ⚡️#YehHaiNayiDilli
">Versatile on the field, humorous and witty off the field! @MStoinis bowled us over in a fun #InstagramLIVE session with his quirky replies 💡
— Delhi Capitals (Tweeting from Home🏠) (@DelhiCapitals) April 19, 2020
P.S. Thank you for gatecrashing our LIVE, @DavidWarner31 ⚡️#YehHaiNayiDilliVersatile on the field, humorous and witty off the field! @MStoinis bowled us over in a fun #InstagramLIVE session with his quirky replies 💡
— Delhi Capitals (Tweeting from Home🏠) (@DelhiCapitals) April 19, 2020
P.S. Thank you for gatecrashing our LIVE, @DavidWarner31 ⚡️#YehHaiNayiDilli
இந்தாண்டு தொடக்கத்தில் நடந்து முடிந்த பிக் பேஷ் டி20 தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மந்தனா - ரோட்ரிக்ஸ் கெமிஸ்ட்ரி - ஐசிசி நடத்திய பர்ஃபெக்ட் பேர் போட்டி